Cinema

மறைந்த பிரபல பாடகர் எஸ் பி பி கடைசியாக பாடிய பாடல் வெளியிடும் திகதி அறிவிப்பு!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் திகதி உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில் ’அண்ணாத்த’ படக்குழு மரியாதை செய்ய திட்டமிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’அண்ணாத்த’. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் செப்டம்பர் 25-ஆம் திகதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த பாடல் ரஜினியின் அறிமுகப்பாடல் என்றும் இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடி உள்ளார் என்றும், இந்த பாடல் தான் அவர் பாடிய கடைசி பாடல் என்றும் கூறப்படுகிறது.  

எஸ்பிபி அவர்கள் மறைந்த தினத்தில் இந்த பாடலை வெளியிடுவது அவருக்கு செலுத்தும் மிகச்சிறந்த மரியாதையாக இருக்கும் என ’அண்ணாத்த’ பட குழு கருதுகிறது.

இந்த நிலையில் தற்போது எஸ்பிபியின் கடைசி பாடல் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading