World

மலேசியாவில் 82 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா!

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, தற்போது மூன்றாவது அலையாக குழந்தைகளை பாதித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 2,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மலேசியாவில் 4 வயதுக்கு உட்பட்ட 19,851 குழந்தைகளும், 5 முதல் 6 வயதுக்குட்பட்ட 8,237 குழந்தைகளும், 7 முதல் 12 வயதுக்குட்பட்ட 26,851 குழந்தைகளும், 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 27,402 குழந்தைகள் என 82,341 குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்தார்.

இதையடுத்து மலேசியாவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பொது நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்காகவும் மருத்துவ சிகிச்சைக்காகவும், குழந்தைகளை வெளியே அழைத்து செல்ல முடியும். மேலும், கல்வி மற்றும் உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்ல அனுமதி உண்டு. இதர காரணங்களுக்கு அனுமதி இல்லை என பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading