Local

மஹிந்த,கோட்டா தடை சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம் வரவேற்பு!

ராஜபக்ஷக்களுக்கு கனடா தடை விதித்துள்ளமையை சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம் வரவேற்றுள்ளது.

ராஜபக்ச சகோதரர்களிற்கு எதிரான கனடாவின் தடையை இலங்கையில் மனித உரிமை மீறல்களிற்கு உள்ளானவர்கள் வரவேற்றுள்ளனர் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

பல தசாப்தங்களிற்கு பின்னர் தண்டனையிலிருந்து விலக்களித்தல் என்ற சுவர் வீழ்ச்சியடைய தொடங்குகின்றது. பொறுப்புக்கூறலை நோக்கிய கனடாவின் நடவடிக்கையை  பாதிக்கப்பட்டு தப்பிபிழைத்தவர்கள் வரவேற்கின்றனர் என ஐடிஜேபி தெரிவித்துள்ளது.

ராஜபக்ச சகோதரர்களான கோட்டாபய மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளமைக்காக இலங்கையின் பாதிக்கப்பட்ட சமூகத்தினரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கனடாவை  பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading