Local

மஹிந்தவின் நியமனத்துக்கு எதிராக தம்பர அமில தேரர் நீதிமன்றில் மனு!

இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வண. தம்பர அமில தேரர் இன்று இந்த மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியும், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புகளை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவு அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று உத்தரவிடுமாறு கோரியுள்ள தம்பர அமில தேரர், இந்த மனு மீது உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படவும், அவரது அமைச்சரவையில் உள்ளவர்கள் அமைச்சர்களாகப் பணியாற்றவும் இடைக்காலத் தடை விதிக்குமாறும் கேட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading