Lead NewsLocal

மஹிந்தவுக்கான நிதிகளை வெட்டும் பிரேரணை மீது நாளை வாக்கெடுப்பு!

பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும் பிரேரணை மீது இதன்போது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதற்கான பிரேரணையை ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் அண்மையில் நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்தனர்.

எனினும், கடந்த இரண்டு சபை அமர்வுகளை புறக்கணித்ததுபோல் நாளையும் மஹிந்த அணி சபை அமர்வை பகிஷ்கரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அஞ்சுவதால் மைத்திரி – மஹிந்த கூட்டணி சபைக்கு வராது என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகியனவும் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.

அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நாளை காலை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading