World

மாடு, நாய் மற்றும் எருமை வளர்த்தால் வரி!

மதுரை மாநகராட்சியில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தல் குறித்து பல விதிமுறைகளை மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு ரூ.10 வரி விதிக்கப்படும்.  

மேலும் வீட்டில் வளர்க்கப்படும் நாய் தெருவில் மற்றவர்களை அச்சுறுத்தினாலோ, அசுத்தம் செய்தாலோ உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். 

இறைச்சி கடை, பிரியாணி விற்பனை நிலையத்திற்கு ஆண்டு உரிமம் சதுரடிக்கு ரூ.10 வரி கட்டவேண்டும். அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading