World

மாட்டு சாணத்தை காணவில்லை என்று பொலிஸில் புகார்!

சட்டீஸ்கர் மாநிலத்தில் 800 கிலோ மாட்டு சாணியை திருடியதாக காவல் நிலையத்தில் புகார் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கவுதன்சமிதி கிராமத்தில் ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 80 கிலோ மாட்டு சாணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கம்ஹான் சிங் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சத்தீஸ்கர் மாநில அரசாங்கம் கால்நடைகள் மற்றும் பால் உரிமையாளர்களிடமிருந்து ஒரு கிலோவுக்கு ரூ.2 என மாட்டு சானத்தை கொள்முதல் செய்யும் நோக்கில் தனித்துவமான ‘கோதன் நயோ யோஜனா’ என்னும் திட்டத்தை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. அதன்படி மாநிலத்தில் விவசாயிகள் பால் முகவர்கள் மாட்டுச்சந்தை வைத்திருப்பவர்கள் என அனைவரும் மாட்டு சாணத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்
மேலும் ஜூன் 15 அன்று கிராம சமிதியின் தலைவர் கம்ஹான் சிங் கன்வார் ஒரு முறையான புகார் அளித்ததாக டிப்கா எஸ்.எச்.ஓ ஹரிஷ் தந்தேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மண்புழு உரம் தயாரிப்பதற்காக ‘கோதன் ந்யோ யோஜ்னா’ திட்டத்தின் கீழ் மாநில அரசு ஒரு கிலோவுக்கு ரூ.2 க்கு மாட்டு சாணத்தை கொள்முதல் செய்து வருகிறது. மேலும் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading