World

மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்!

ராஜஸ்தானில் தலித் மாணவன் ஒருவன் ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்துள்ளான்.

இந்தியா- ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் ஷயாளா கிராமத்தில் தனியார் பாடசாலை ஒன்று அமைந்துள்ளது.

இந்த பாடசாலையில் படிக்கும் 9 வயது தலித் சிறுவன் ஆசியர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளான்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்து உதைத்தார். இதில் சிறுவனின் காது, கண்களில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். இந்த சம்பவம் கடந்த மாதம் 20-ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளான்.

சிறுவன் இறந்த செய்தி அறிந்த அந்த பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். நிலைமை மோசமடைவதை தடுக்க அந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொலை வழக்கில் ஆசிரியரை பொலிசார் கைது செய்தனர்.

ஆசிரியரால் அடித்து கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நிவாரணம் வழங்க ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

அதோடு இந்த வழக்கு தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading