Local

மாமியை பார்க்க சென்ற மாமனார் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்

மண்டூர் பிரதேசத்தில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்தகாரம் செய்த 46 வயதுடைய மாமனாரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை (04) உத்தரவிட்டார்.
வெல்லாவெளி பொலிஸ் பிரிலிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் குறித்த சிறுமியின் மாமியர் அவரின் குழந்தை விபத்து ஒன்றில் காயமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர் இந்த நிலையில் செவ்வாய்கிழமை இது தொடர்பாக விசாரிப்பதற்காக மாமானாரின் வீட்டுக்கு சென்றபோது அங்கு தனிமையில் இருந்த மாமனர் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமி தனக்கு நேர்ந்தகதி தொடர்பாக உறவினருக்கு தெரியப்படுத்தியமையடுத்து இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டன இரண்டு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய மாமானாரை பொலிசர் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை இன்று புதன்கிழமை (04) களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading