World

மாரடைப்பால் துடித்த இளைஞரின் கழுத்தை சுற்றி நெரித்த 15 அடி நீள பாம்பு!

அமெரிக்காவில் மாரடைப்பால் துடித்து கொண்டிருந்த இளைஞரின் கழுத்தை 15 அடி நீளம் கொண்ட பாம்பு சுற்றி நெரித்த திகில் சம்பவம் நடந்துள்ளது.

Fogelsville-ல் உள்ள ஒரு வீட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி 28 வயதான இளைஞனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அவரின் கழுத்தை 15 அடி நீளம் கொண்ட பாம்பு சுற்றியிருக்கிறது.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அறிந்த பொலிஸார் அந்த வீட்டிற்கு விரைந்தனர். அப்போது தரையில் பேச்சு மூச்சின்றி கிடந்த இளைஞரின் கழுத்தை பாம்பு சுற்றியிருப்பதை கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் ஒரு அதிகாரி பாம்பின் தலையில் சுட்டு அதை கொன்றார்.இதையடுத்து அந்த இளைஞர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading