Local

மின்சார கட்டணங்களை 06 மாதத்திற்குள் கட்டுவதற்கு சலுகை!

கொவிட் 19 தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனை மற்றும் தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணப் பட்டியல் மற்றும் நீர்க் கட்டணப் பட்டியல் செலுத்துவதற்கு சலுகை வழங்குவதற்கு ஏற்புடையதாக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வீடு, வர்த்தக மற்றும் கைத்தொழில் மின்சாரப் பாவனையாளர்களுக்கு குறித்த காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணப் பட்டியலைச் செலுத்துவதற்காக பட்டியல் திகதியிலிருந்து 6 மாதங்களுக்கு இலகு தவணைக் காலத்தை வழங்கவும் அதுவரை மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட சினிமா திரையரங்குகளில் 2020 மார்ச் மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையான மின் கட்டணப் பட்டியல், அதன் பட்டியல் திகதியிலிருந்து 12 சமமான மாதாந்த தவணைகளில் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கவும் அதுவரை மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வருடம் 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை சேர்ந்துள்ள மின் கட்டணப் பட்டியல் 12 சமமான மாதாந்த தவணைகளில் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கவும் அதுவரை மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading