World

மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

ஜார்க்கண்டில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் கர்ரா பிளாக்கில் உள்ள தஹுடோலி கிராமத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த சிலர் அருகிலுள்ள மரத்தின் கீழ் தஞ்சம் புகுந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில், மங்கா முண்டா (55), அவரது மனைவி ஜிவந்தி (45), அவர்களின் மகன் புனா (32) மற்றும் அவரது மனைவி ஜெய்மா (30), புனா – ஜெய்மா தம்பதியின் ஆயுஷ் (5) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்களில் புனா – ஜெய்மா தம்பதியின் இரண்டு வயது மகன் அர்பன், பலத்த  தீக்காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த போலீசார் மின்னல் தாக்கி உயிரிழந்த 5 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மங்கா முண்டாவின் குடும்பத்தில் எஞ்சியிருக்கும் அவரது மகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10,000 வழங்கப்பட்டது. மேலும், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து மின்னல் தாக்குதலில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுக்கும் தலா, ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார். ஒரே குடும்பத்தில் 5 பேர் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading