Local

மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30.23 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,023,138 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 141,292,671 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 119,905,199 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,784 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது.

வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் 14 கோடியே 12 ஆயிரத்து 95 ஆயிரத்து 191 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 83 லட்சத்து 61 ஆயிரத்து 564 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 11 கோடியே 99 லட்சத்து 10 ஆயிரத்து 355 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 30 லட்சத்து 23 ஆயிரத்து 272 பேர் உயிரிழந்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading