Local

மின்வெட்டு ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் அபாயம்!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால் தற்போதைய மின்வெட்டு ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடா ஹேவா தெரிவித்துள்ளார்.

அதன்படி ,இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார். .

அதற்கமைய எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்ட மின்வெட்டு இன்னும் தீர்க்கப்படவில்லை.

மேலும் ,வெளிநாடுகளில் இருந்து அவ்வப்போது கொண்டுவரப்படும் எரிபொருட்கள் மூலம் இப்பிரச்சினைக்கு தற்காலிக தீர்வுகள் கிடைத்தாலும் நிரந்தரத் தீர்வு தற்போது வரை எட்டப்படவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading