World

மியான்மரில் இடம்பெற்ற வான்வழி தாக்குதலில் 33 பேர் பலி

மியான்மரில் இடம்பெற்ற வான்வழி தாக்குதலில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 36 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சக்திவாய்ந்த கிளர்ச்சி குழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், சந்தை ஒன்றிற்கு அருகே அந்நாட்டு இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் மேற்கு பகுதியான ராகைன் மாநிலத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், ஜனநாயகம் கோரும் எதிர்ப்பு படைகள் மற்றும் இன ஆயுத குழுக்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சியான கொடிய வான்வழி தாக்குதல்களில் மிக சமீபத்திய நடவடிக்கை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெப்ரவரி 1, 2021 அன்று ஆங் சான் சூ கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து மியான்மர் கொந்தளிப்பான சூழலில் உள்ளது.

மியான்மரில் இடம்பெற்ற வான்வழி தாக்குதலில் 33 பேர் பலி | 33 Killed In Airstrike In Myanmar

ராகைன் பகுதியை சேர்ந்த சக்திவாய்ந்த இன ஆயுத குழுவான அரக்கன் இராணுவம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேக்கு மேற்கே சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியாவ்க்டாவ் நகரில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கியாவ்க்டாவ் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இக்குழுவின் கூற்றுப்படி, நண்பகல் நேரத்தில் போர் விமானம் ஒன்று உள்ளூர் சந்தைக்கு அருகே இரண்டு குண்டுகளை வீசியதில், வியாபாரிகள், பொருட்கள் வாங்க வந்தவர்கள் மற்றும் பாதசாரிகள் உட்பட 33 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 36 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அக்குழு எச்சரித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading