Local

மீண்டும் குடியுரிமை பெற போராடும் கோட்டா மறுக்கும் அமெரிக்கா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரமையை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள நிலையில், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்ஷ வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வளவு முயற்சி செய்தாலும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான வீசா வழங்கப்பட மாட்டாது எனவும் அதனால் முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்கத் தூதுவர் இந்தச் செய்தியை கூறும் வேளையில் கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ உட்பட முழு குடும்பமும் உடனிருந்ததாக அறியமுடிகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading