Local

மீண்டும் பயணக்கட்டுப்பாடு?

மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றவில்லை என்றால், பயண கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதன்படி ,புதிய சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது கொரோனா தொற்றாளர்களில் ஏற்பட்ட குறைவ அல்ல என்று அவர் தெரிவித்தார்.

புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி, நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை சீர்குலைவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிலைமை குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

மேலும் ,பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், மக்கள் எப்போதும் சுகாதார விதிகளைப் பின்பற்றுவது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading