Local

மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தாலும் அது மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்பதால் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு கூட்டத்தில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் மின்சார சபையின் மேலதிகப் பொது முகாமையாளர் ரொஹான் செனெவிரத்ன தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading