World

முகக் கவசமாக மாறிய பெண்ணின் உள்ளாடை விமானத்தில் பரபரப்பு!

விமானத்தில் பயணியொருவர் முகக் கவசம் அணியாது பெண்ணின் உள்ளாடை மூலம் முகத்தை மறைத்துக் கொண்டு வந்த விநோத சம்பவம் அமெரிக்காவில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடம் ஜேன் என்ற பயணியே இவ்வாறு  அமெரிக்காவின் ஃபோர் லாடர்டேல் நகரிலிருந்து வொஷிங்டன் செல்லும் யுனைட்டட் விமானத்தில் ஏறியுள்ளார்.

இதன் போது  முகக் கவசம் அணியாத அவர் உள்ளாடையை வைத்து முகத்தை மறைத்திருந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பணிப்பெண் ஒருவர் அவரிடம்  ‘நீங்கள் முகக் கவசம்  அணியாவிட்டால் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்படுவீர்கள். உங்களை பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படவே ஆடம் ஜேன் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். எனினும் அவருக்கு ஆதரவாக சில விமான பயணிகளும் கீழே இறங்கி வாக்குவாதம் செய்ததால் அவ்விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஆடம் ஜேன் கூறுகையில், நான் எந்த விதிகளையும் மீறவில்லை. விமானத்திற்குள்ளே வரும் வரை முகக் கவசம் அணிகிறார்கள். ஆனால் உள்ளே சாப்பிடுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் முகக் கவசத்தை  கழட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவர்கள் மாஸ்க் அணியவில்லை என்றுதானே அர்த்தம். ஏன் இந்த முரண்பாடு.’ என்றார்.

மேலும் விமானத்தில் தனக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்களுக்கு நன்றி தெரிவித்த ஆடம் ஜேன், அவர்கள் அநீதி நடப்பதை உணர்ந்து எனக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading