Local

முகப் பூச்சுகளை பயன்படுத்துவது புற்றுநோயை ஏற்படுத்தலாம்!

நாட்டில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இயற்கையான சருமத்தைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது என தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீ தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், சில பெண்கள் சரியான விளக்கமின்றி சருமத்தை வெண்மையாக்கும் முகப் பூச்சுகளை பயன்படுத்துவது கூட புற்றுநோயின் தாக்கத்துக்கு காரணமாக அமையலாம் எனவும் அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading