Local

முடக்கத்தின் பிரதிபலனை பெற இரு மாதங்கள் காத்திருக்க வேண்டுமாம்!

நாட்டில் தற்போதுள்ளதைப் போன்று இறுக்கமற்ற முடக்கம் தொடர்ந்தும் காணப்படுமாயின் கோவிட் கட்டுப்படுத்தலில் சிறந்த பிரதிபலனைப் பெற இன்னும் 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறுக்கமான முடக்கத்தின் மூலம் 10 நாட்களில் பெற்றிருக்க வேண்டிய பிரதிபலனையே ஒரு மாதத்தின் பின்னர் தற்போது பெற்றுள்ளோம் என்று சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும், உலகில் அதிக சந்தர்ப்பங்களில் முடக்கத்திற்கு சென்ற ஒரேயொரு நாடு இலங்கை என்றும், முடக்கத்தின் போது அதிகளவு போக்குவரத்துக்கள் இடம்பெறும் ஒரேயொரு நாடு இலங்கை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading