Features

முட்டையின் மஞ்சள் கரு வேறு நிறத்தில் இருந்தால் சாப்பிடலாமா?

பொதுவாக முட்டையை உடைக்கும் போது நம்மில் பெரும்பாலானோர், அதன் மஞ்சள் கருவின் நிறம் மாறுபட்டிருப்பதை கவனித்திருக்க மாட்டோம்.

உண்மையில் இதனை கவனிப்பது நல்லதாகும். ஏனெனில் முட்டையின் கரு வேறு நிறத்தில் இருந்தால் அதனை எடுத்துக் கொள்வது ஆபத்தானதாகும்.

அந்தவகையில் முட்டையின் மஞ்சள் கரு எந்த நிறத்தில் இருந்தால் அதனை சாப்பிட கூடாது என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ஆரஞ்சு நிற மஞ்சள் கரு

மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான கோழியிடமிருந்து வந்திருக்கிறது என்று அர்த்தம்.

இந்த மாதிரியான கோழிகள் ஆரோக்கியமான புழு புற்களை மேய்ந்து, சூரிய வெளிச்சம் பெற்று இயற்கையான முறையில் அவை வளர்வதால் அவற்றின் முட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வெளிர் ஆரஞ்சு

வெளிர் ஆரஞ்சு நிறத்தில் மஞ்சள் கரு இருந்தாலும், அது நல்லது. ஏனெனில் அது ஆர்கானிக் முட்டை என்று கூறலாம். 

கருமஞ்சள் நிற கரு

முட்டையின் மஞ்சள் கருமஞ்சள் நிறத்தில் இருந்தால் அது நல்லதல்ல. ஏனெனில் அவை முற்றிலும் குறைவான தரம் கொண்டவை. அந்த முட்டை ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்க்கப்பட்டதாகும். 

வெளிர் பழுப்பு

வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும் முட்டைகளை தைரியமாக வாங்கி சாப்பிடலாம்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading