Uncategorized

முட்டையின் விலை 30 ரூபாவாக குறைகிறது!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா விலையில் உணவு உற்பத்தியாளர்களுக்கு வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம், 2 மில்லியன் முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading