Features

முதன்முறையாக காகிதப் பணம் எவ்வாறு உருவானது..!!

இன்று நாம் சாதாரணமாக பர்ஸில் வைத்து பயன்படுத்தும் காகிதப் பணம், ஒரு காலத்தில் யாருமே நினைத்துக்கூடப் பார்க்காத ஒரு பிரம்மாண்டமான கண்டுபிடிப்பு! ஒரு சாதாரண காகிதத்திற்கு தங்கத்தின் மதிப்பு இருக்கும் என்று சொன்னால் அன்று யாராவது நம்பியிருப்பார்களா?

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் வியாபாரம் செய்ய தங்கம், வெள்ளி மற்றும் செப்பு நாணயங்களைத்தான் பயன்படுத்தினார்கள். ஆனால், பெரிய அளவில் வியாபாரம் செய்யும்போது மூட்டை மூட்டையாக நாணயங்களை குதிரைகளில் சுமந்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. எடையைச் சுமக்க முடியாமல் திணறியதோடு மட்டுமல்லாமல், வழியில் கொள்ளையர்கள் பயமும் அதிகமாக இருந்தது.

இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, சுமார் 7-ஆம் நூற்றாண்டில் சீனர்கள் ஒரு புதிய மூளையை உபயோகித்தார்கள். தங்க நாணயங்களை அரசாங்கத்திடம் அல்லது பெரிய வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடாக ஒரு ‘காகித ரசீதை’ பெற்றுக் கொண்டார்கள். இதுதான் உலகின் முதல் காகிதப் பணத்தின் தொடக்கம்!

பின்னர், 11-ஆம் நூற்றாண்டில் ‘ஜியாவோசி’ என்ற பெயரில் உண்மையான காகித பணத்தை சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதை பார்த்த மார்கோ போலோ என்ற புகழ்பெற்ற உலகப் பயணி, மிகுந்த ஆச்சரியமடைந்தார். “காகிதத்தை வைத்து இவர்கள் வியாபாரம் செய்கிறார்களே!” என்று வியந்துபோய், இந்த பிரம்மாண்ட யோசனையை ஐரோப்பாவிற்கு கொண்டு சென்றார்.

ஆரம்பத்தில் வெறும் காகிதத்தை பணமாக நம்ப மறுத்த உலக நாடுகள், அதன் பின்னால் இருக்கும் எளிமையைப் புரிந்து கொண்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காகிதப் பணத்திற்கு மாறத் தொடங்கின. மூட்டை மூட்டையாக தங்கத்தை சுமந்த மனிதன், இன்று தன் பாக்கெட்டில் சில காகிதங்களை வைத்துக்கொண்டு உலகையே வலம் வருகிறான்.

இன்று நாம் டிஜிட்டல் பேமெண்ட் (UPI), கிரிப்டோகரன்சி என்று காலத்தின் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டாலும், பொருளாதாரத்தின் தலையெழுத்தை மாற்றிய காகிதப் பணத்தின் வரலாறு சீனாவில்தான் தொடங்கியது என்பது பலருக்கும் தெரியாத ஒரு ஆச்சரியம்!

நீங்க இப்ப அதிகமா கையில் Cash பயன்படுத்துவீர்களா? அல்லது Google Pay / PhonePe போன்ற Digital Payment பயன்படுத்துவீர்களா? உங்களுடைய சாய்ஸ் என்ன என்பதை கமெண்டில் சொல்லுங்கள்! 👇

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading