Local

ஷிராந்தி முன்பிணை மனு தாக்கல்..கைது செய்தால் விடுவிக்கவேண்டும்

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக வெளிநாட்டில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்கறிஞர் ஜெயபாலன் மூலம் மாளிககந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று (05) முன்பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

எந்தவொரு பிணை நிபந்தனைகளின் கீழும் தன்னை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (05) மாளிககந்த நீதவான் ஜனனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கைது செய்தால் விடுவிக்கவேண்டும் : ஷிராந்தி முன்பிணை மனு தாக்கல் | Shiranthi Files Anticipatory Bail Application

இந்த மனுவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரதிவாதியாகவும், மேரி லூயிஸ் சிராந்தி ராஜபக்ச முறைப்பாட்டாளராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டாளர், வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பும்போது விமான நிலையத்தில் காவல்துறையினர் தன்னைக் கைது செய்ய வாய்ப்புள்ளதால், எந்த நிபந்தனைகளின் கீழாவது பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று தனது பிணை மனுவில் கோரியுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading