Cinema

முதல் காட்சியில் 17 பில்லியன் டொலர் வசூல் சாதனைப் படைத்த அவதார் 2

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள அவதார்: தி வே ஆஃப் வாட்டர் வியாழன் இரவு முதல் காட்சிகளில் இருந்து அமெரிக்க மற்றும் கனேடிய பாக்ஸ் ஆபிஸில் 17 மில்லியன் டொலர் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த எண்ணிக்கையானது சமீபத்தில் வெளியான Black Panther: Wakanda Forever திரைப்படத்தின் முதல் காட்சி வசூலை முந்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Black Panther: Wakanda Forever உள்நாட்டுத் திரையரங்குகளில் அதன் முதல் இரவு காட்சியில் 28 மில்லியன் டொலர் வசூலித்தது சாதனை படைத்திருந்தது.

உலக அளவில் அதிக வசூல் செய்த அவதார் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம்  உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் 50.4 மில்லியன் டொலரை வசூலித்துள்ளது.

இந்நிலையில், ஹாலிவுட்டின் தற்போதைய மிகப் பெரிய கேள்வி த வே ஆஃப் வாட்டர் அதன் பாரிய உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகளை ஈடுகட்டுமா என்பதுதான்.

ஸ்டுடியோஸ் டிக்கெட் விற்பனையை திரையரங்குகளுடன் பிரித்தது, மேலும் கேமரூன் ஜிக்யூ பத்திரிக்கையிடம், தி வே ஆஃப் வாட்டர் செலவுகளை ஈடுபட்ட 2 பில்லியன் டொலர் வசூலிக்க வேண்டும் என்று கூறினார்.

தி வே ஆஃப் வாட்டர் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 3டி தொழில்நுட்பத்துடன் பார்வையாளர்களைக் கவர்ந்த முதல் திரைப்படமாக  வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading