Cinema

முதல் முறையாக இணையும் அண்ணன் தம்பி கூட்டணி!

நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். என்னதான் அரசியலில் பிசியாக இருந்தாலும், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவருக்கு தற்போது ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக், கண்ணை நம்பாதே, ஏஞ்சல் போன்ற படங்கள் கைவசம் உள்ளன.
இந்நிலையில், உதயநிதி அடுத்ததாக நடிக்கும் படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் அருள்நிதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவலும் தீயாய் பரவி வருகின்றன.
மேலும் இந்தக் கூட்டணி உறுதியானால் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading