Local

முதல் முறையாக மனிதனுக்கு பறவைக்காய்ச்சல் அதிர்ச்சியில் வைத்தியர்கள்!

சிலி நாட்டில் பறவை காய்ச்சல் முதல் முறையாக மனிதனுக்கு பரவியுள்ளமையினால் சுகாதார பிரிவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் சமீப நாட்களாக அங்குள்ள மனிதர்களுக்கு சளி இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளது.

இது இன்ப்ளூயன்சா ரக காய்ச்சலாக இருக்குமோ என்ற கோணத்தில் பரிசோதனை செய்த நாட்டின் சுகாதார அமைச்சகதிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் என்னவென்றால், 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இது வரை பறவைகளுக்கு மட்டுமமே பரவிய பறவை காய்ச்சல் தற்போது மனிதருக்கும் ஏற்பட்டுள்ளது என்பது தான்.

நோய்த்தொற்றின் காரணத்தை  கண்டறியவும், நோயாளியுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை அடையாளம் காணவும் சிலி நாட்டு அரசாங்கம் தீவிர விசாரணையில்  ஈடுபட்டுள்ளது .கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சிலியில் காட்டு விலங்குகளுக்கு H5N1 (பறவைக் காய்ச்சல்) வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading