Cinema

முதல் முறையாக 17 மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் முதல் முறையாக 17 மொழிகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் ´ஜகமே தந்திரம்´. இந்தப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகர் கலையரசன் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரகிட ரகிட பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜகமே தந்திரம் படம் வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஜகமே தந்திரம் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஓடிடியில் வெளியாகும் தமிழ் படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை ஆகும். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்வதில் தனுஷுக்கு உடன்பாடில்லை என ஏற்கனவே தகவல் வெளியானது.

தற்போது நடிகர் தனுஷ், தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அமெரிக்காவில் உள்ள தனுஷ் நாடு திரும்பியதும் இயக்குநரும் தனது அண்ணனுமான செல்வராகவன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் மாரி செல்வராஜின் படத்திலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading