World

முதியவர்களின் எண்ணிக்கை வீதத்தில் அதிகரிப்பு

ஜப்பானில் தற்போது உள்ள ஒவ்வொரு 10 பேரில் ஒருவர் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இந்த நிலை முதல் முறையாக ஜப்பானில் பதிவாகியுள்ளது.

125 மில்லியன் மக்கள் தொகையில் 29.1 வீதமானோர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்றும் ஜப்பானின் தேசிய தரவு குறிப்பிட்டுள்ளது.

ஜப்பான் உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதங்களிலான நாடுகளுள் ஒன்றாகும், இந்நிலையில் அங்கு வயதான முதியவர்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பதில் நீண்டகாலமாக போராடி வருகிறது.

65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் விகிதாச்சாரத்தால் அளவிடப்படும் உலகின் மிகப் பழமையான மக்கள் தொகையை ஜப்பான் கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த விகிதம் இத்தாலியில் 24.5 வீதமாகவும் மற்றும் பின்லாந்தில் 23.6 வீதமாகவும் காணப்படுகிறது.

அவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

ஜப்பானில், தேசிய மக்கள்தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின்படி, 2040 ஆம் ஆண்டுக்குள் 34.8 வீதமான மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading