Local

முத்தையா வரலாற்று படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு!

தமிழ் சினிமாவில் இருந்து தவிர்க்க முடியாத நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தை தொடர்ந்து பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையாக உருவாகவிருக்கும் ´800´ எனும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று கூறியவுடன் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. 

இந்நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். 

அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா.. நமக்கெதற்கு மாத்தையா?.. மாற்றய்யா? 

இதனை விஜய் சேதுபதி அந்த படத்தின் நடிக்க வேண்டாம் என்றும் இயக்குனர் சீனு ராமசாமி குறிப்பிட்டு கூறுகிறார் என்று சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading