Local

முன்னால் ஜனாதிபதி மைத்திரியின் வீட்டில் நடந்த அவசர சந்திப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் மத்திய குழுவில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து நேற்று இரவு கூடிய அரசியல் குழு தீர்மானங்களை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற பிரவேசம் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மீது ஆளும் கட்சி தரப்பினர் முன்வைக்கும் கடுமையான விமர்சனங்கள் போன்றவை குறித்து நேற்று இரவு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

இந்நிலையில் முக்கிய தீர்மானங்களை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுக்கக்கூடும் என கருதப்படுகிறது.

அத்துடன் அமெரிக்க தூதுவருடன் மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் அவசரமாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் குழு கூட்டம் இடம்பெற்றமை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று(06) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வீட்டில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading