Local

முன்னாள் ஜனாதிபதியின் கருத்தால் குழப்பத்தில் கூட்டமைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தினால் அரசாங்கத்திற்குள் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவையில் வார இறுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கலந்துகொண்டிருந்தார்.

அப்போது உரையாற்றிய அவர், நீர்க்காகம் ஒன்று மீன் ஒன்றைப் பிடித்து சொன்டில் வைத்திருந்தபோது, திடீரென வந்த கழுகு அந்த மீனைப் பறித்துச் சென்றது. அதேபோலவே நானும் திடீரென அதிரடி ஆட்டத்தை ஆரம்பிப்பேன். கழுகைப் போல சரியான நேரத்தில் அடிகொடுப்பேன் என்று கூறியிருக்கின்றார்.

மைத்திரியின் இந்தக் கருத்து தற்போது அரச தரப்பினரிடையே பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

யாரை இலக்கு வைத்து இப்படி அவர் சொல்லியுள்ளார் என்று அரச தரப்பினர் தற்போது அலசி ஆராய்ந்து வருகின்றார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading