World

முன்னாள் போப் 16ஆம் பெனடிக்ட் இயற்கை எய்தினார்!

முன்னாள் போப் 16ஆம் பெனடிக்ட் தனது 95 ஆவது வயதில் இயற்கையெய்தியுள்ளார். 

அவரது வாடிகன் இல்லத்தில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் எமரிட்டஸ் 16ஆம் பெனடிக்ட் இன்று காலை 9.34 மணிக்கு வத்திக்கானில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார். கூடுதலான தகவல்களை விரைவில் அறியத்தருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாக வழிநடத்திய அவர், தனது இறுதி காலத்தை வத்திக்கானில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் கழித்தார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading