World

முன்னாள் மனைவியை விஷம் வைத்து கொன்ற கணவனின் அதிர்ச்சி தகவல்!

பிரான்ஸில் முன்னாள் மனைவியை விஷம் வைத்து கொலை செய்த முன்னாள் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிகவும்  திட்டமிட்ட படுகொலையினை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடந்த ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் Catherine D எனும் பரிசைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அடி வயிற்றில் வலிப்பதாகவும், தீராத தலைவலி ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சில நாட்களில் அவர் வீட்டுக்குத் திரும்பியுள்ள நிலையில், மீண்டும் இவ்வருட ஆரம்பத்தில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார்.

இப்போது அவரது உடலில் விசம் கலந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஆனால் அவர் சில நிமிடங்களிலேயே மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் குறித்த பெண்ணின் 50 வயதுடைய முன்னாள் கணவரைக் கைது செய்தனர்.

குறித்த நபர் அப்பெண்ணுக்கு விசம் கலந்த உணவு கொடுத்திருந்ததாக தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading