World

முன்னாள் முதல்வரின் மகள் தூக்கிட்டு தற்கொலை!

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் இளைய மகள் உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் இளைய மகள் உமா மகேஷ்வரி ஹைதராபாத்தின் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்ததை தொடர்ந்து உமா மகேஷ்வரி இன்று துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்டுள்ள உமா மகேஷ்வரியின் மகள் திருமணம் அண்மையில் வெகுச் சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் அவரது தற்கொலை குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்.டி. ராமாராவுக்கு 8 மகன்கள் 4 மகள்கள் இருந்த நிலையில், மகள்களில் உமா மகேஷ்வரி தான் இளையவர் என்பதும், 8 மகன்களில் ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர் என்பதும் குறிப்பிடதக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading