Sports

மும்பையை பந்தாடியது சென்னை!

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 12வது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து மும்பை அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர் .

தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். ரோகித் சர்மா 21 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் துஷார் தேஸ்பாண்டே பந்துவீச்சில் வெளியேறினார். மறுபுறம் சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 32 ஓட்டங்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் ஏமாற்ற மும்பை அணி தடுமாறியது. அடுத்து வந்த கேமரூன் கிரீன்(12), திலக் வர்மா(22) ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர். கடைசியில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் , சான்ட் னர், துஷார் தேஸ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.

இலகுவான இலக்குடன் சென்னை அணி
தொடர்ந்து 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் , கான்வே களமிறங்கினர். இதில் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரஹானே அதிரடி காட்டினார், பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். குறிப்பாக மும்பை அணியின் அர்சத் கான் வீசிய ஓவரில் 1 சிக்ஸ்ர், 4 பவுண்டரி பறக்க விட்டார்.

தொடர்ந்து ஆடிய அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து ஆடினார். தொடர்ந்து ஆடிய ரஹானே 27 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்டு களமிறங்கிய ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் நிலைத்து ஆடி ஓட்டங்கள் குவித்தனர். சிறப்பாக விளையாடிய துபே 28 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து ராயுடு களமிறங்கி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் இறுதியில் 18. 2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது. ருதுராஜ் 40 ஓட்டங்களும், ராயுடு 20 ஓட்டங்களும் எடுத்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading