Sports

மும்பையை வீழ்த்தியது சென்னை!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது. அறிமுக வீரர் நேஹால் வதேரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து, 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணி சார்பில் பதிரன 3 விக்கெட்டும், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அதிரடியாக ஆடினார். 16 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 30 ரன்களைக் குவித்தார். ரகானே 21 ரன்னிலும், அம்பதி ராயுடு 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டேவன் கான்வே பொறுப்புடன் ஆடி 44 ரன்னில் வெளியேறினார். இறுதியில், சென்னை அணி 140 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி 6வது வெற்றியைப் பதிவு செய்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading