CinemaLocal

முரளிதரனின் 800 திரைப்படத்தின் முதற்பார்வை வெளியானது!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சாதனைத் தமிழர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வருவாகும் 800 திரைப்படத்தின் முதற்பார்வை வெளியாகியுள்ளது.

முத்தையா முரளிதரனின் 51ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கும் இதன் முதற்பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ஒஸ்கார் விருது வென்ற ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் நடித்த மாதுர் மிட்டல் நடிக்கிறார்.

முதலில் இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்பலை காரணமாக, அப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading