Local

முழுச் சம்பளத்தையும் கொடுத்தால் டிலான் பெரேராவால் உயிர் வாழ முடியாதாம்!

கோவிட் நிதியத்திற்கு முழுச் சம்பளத்தையும் வழங்கிவிட்டால் தன்னால் உயிர்வாழ முடியாதென்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவிக்கின்றார்.

கொழும்பில் உள்ள பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் பேசியபோது,

“இன்று அரசியல்வாதிகள் பலரும் சம்பளத்தை  கோவிட் நிதியத்திற்காக அன்பளிப்பு செய்கின்றனர். எனக்கு சம்பளத்தை முழுதும் அளிக்க முடியாது என்பதால் அரைச்சம்பளத்தை அன்பளிப்பு செய்கின்றேன். எனது தந்தையார் த பினன்ஸ் நிறுவனத்தில் முதலிட்டதால் நட்டமடைந்தார். அதனால் இன்று முழுச் சம்பளத்தையும் நிதியத்திற்கு அளித்துவிட்டால் நான் பொருளாதார பக்கத்தில் சிரமத்தை எதிர்கொண்டுவிடுவேன்” என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading