World

முஸ்லிம்களை இன அழிப்பிற்கு உட்படுத்த அழைப்பு விடுத்த இந்து தலைவர்கள்!

இந்தியாவின் ஹரிதுவாரில் இடம்பெற்ற நிகழ்வில் இந்துத்துவ தலைவர்கள் முஸ்லிம்களை இன அழிப்பிற்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 17 ம் திகதி முதல் 19 ம் திகதிவரை பெருமளவு மதத்தலைவர்கள் வலதுசாரி தலைவர்கள் கடும் தீவிரவாத அடிப்படைவாத தலைவர்கள் ஹரித்துவாரில் இடம்பெற்ற மத பாராளுமன்றம் என்ற நிகழ்வில் கலந்துகொண்டனர் என தெரிவித்துள்ள வயர் இந்த நிகழ்வில் முன்னொரு போதும் இல்லாத வெறுப்புணர்வு பேச்சுக்கள் வன்முறைகளிற்கான அழைப்புகள் முஸ்லீம்களிற்கு எதிரான உணர்வுகளை அவதானிக்க முடிந்தது என தெரிவித்துள்ளது.
டிசம்பர் 17 முதல் 19 ம் திகதி வரை உத்தரகாண்டில் உள்ள ஹரித்துவாரில் ஏற்பாடு செய்யப்பட்ட தர்மசன்த் நாட்டில் வெறுப்பை தூண்டும் பேச்சுகளிற்கு ஒரு புதிய அளவுகோவை ஏற்படுத்தியுள்ளது என வயர் தெரிவித்துள்ளது.

நாங்கள் தயார்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என உத்தரகாண்டை சேர்ந்த வலதுசாரி அமைப்பான இந்து ரக்சசேனாவின் ஸ்வாமி பிரபோனந் கிரி தெரிவித்துள்ளார்.
அந்த தயார்படுத்தல்கள் என்னவென்பதை நான் உங்களிற்கு தெரிவிக்கின்றேன்  இதுவே தீர்வு என்பதை நான் உங்களிற்கு தெளிவாக தெரிவிக்கின்றேன் இதனை பின்பற்றினால் உங்களிற்கான பாதை தெளிவானது என தெரிவித்துள்ள அவர் மியன்மாரில் இந்துக்கள் துரத்தப்படுகின்றனர் இதனை அரசியல்வாதிகளும் பொலிஸாரும் அரசியல்வாதிகளும் வேடிக்கை பார்த்தனர் என தெரிவித்துள்ளார்.

அவர்கள் அவர்களை கழுத்துக்களை துண்டித்துகொலை செய்யதொடங்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது எங்கள் மாநிலம் எங்கள் தேசம்- அவர்கள் இந்துக்களை கொலை செய்து தொங்கவிட்டதை புதுடில்லி எல்லையில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனிமேலும் நேரமில்லை நீங்கள் உயிரிழப்பதற்கு தயாராகவேண்டும் அல்லது நீங்கள் அவர்களை கொல்ல தயாராகவேண்டும் வேறுவழியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மியன்மாரை போல இங்கு ஒவ்வொரு இந்துவும் ஆயுதங்களை தூக்கவேண்டும் இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் இதனை தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading