மூக்கிற்கும், உதடுகளுக்கும் இடையில் உள்ள பாகத்திற்கு என்ன பெயர்?
கற்றது கை மண் அளவு கல்லாதது உலக அளவு என ஒரு பழமொழி உண்டு.
அது 100 சதவீதம் உண்மை, ஏனென்றால் எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்து விடாது.
அந்தவகையில், மனிதனின் உடலை குறித்து கூட பலருக்கும் தெரியாத நிறைய விஷயங்கள் உள்ளன.
மனித முகத்தில் உள்ள ஒரு பகுதியின் பெயர் என்ன என்ற கேள்வி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மனித முகத்தில் கண்கள், காதுகள், மூக்கு, வாய், உதடு, கன்னம், நெற்றி என எல்லா பாகங்களும் தெரிந்தவை தான்.
ஆனால் மூக்கிற்கும், உதடுகளுக்கும் இடையில் உள்ள பாகத்திற்கு என்ன பெயர் என உங்களுக்கு தெரியுமா?
மூக்கிற்கும், உதடுகளுக்கும் இடையே இருக்கும் பகுதிக்கு ஃபில்ட்ரம் என்று பெயர். இது ஒரு ஆங்கில சொல்லாகும்.
