Local

மூன்றாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது!

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டதை அடுத்து தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

போட்டியில் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் நடுவர்களால் போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இங்கிலாந்து அணி சார்பில் அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட சோம் கரண் 4 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.

எவ்வாறாயினும், தொடர்ந்து மழை பெய்ததால் இங்கிலாந்து அணிக்கு துடுப்பெடுத்தாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்தனர்.

போட்டித் தொடரின் தொடர் ஆட்ட நாயகனான டேவிட் வில்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading