Local

மூன்றாவது டோஸ் தடுப்பு மருந்து அவசியமில்லை ஆய்வில் தகவல்!

கடந்த ஆண்டைவிட தற்போது வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் குறைந்துள்ளதற்கு முக்கியக் காரணம் மக்கள் துரிதமாக தடுப்பு மருந்துகள் செலுத்திக் கொண்டதுதான்.

இந்நிலையில் இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகளுடன் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்துவது பாதுகாப்பானது என்று உலக விஞ்ஞானிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இதற்கு மாற்று கருத்தும் நிலவி வருகிறது.

இதனிடையே தற்போது எடுக்கப்பட்டுள்ள ஆய்வு ஒன்றில் மூன்றாவது டோஸ் தடுப்பு மருந்து தேவை இல்லை என்று தெரிய வந்துள்ளது.

லான்செட் இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரயேஸஸ் முன்னதாக மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பு மருந்தை இந்த ஆண்டு இறுதிவரை எந்த நாடும் தங்கள் குடிமக்களுக்கு செலுத்த வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

உலகின் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு குறைந்தபட்சம் 10 சதவீத தடுப்பு மருந்து கிடைத்ததும் மூன்றாவது டோஸ் குறித்து ஆலோசிக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை வழிமொழியும் வகையில் தற்போது பிரான்ஸ் விஞ்ஞானிகளும் தங்கள் ஆய்வின் மூலமாக கருத்து ஒன்றை கூறியுள்ளனர்.

அதில், “கொரோனா பல்வேறு மாதிரியாக உருமாறும் நிலையில் மூன்றாவது டோஸ் செலுத்துவதால் பயனில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading