மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மீண்டும் அதே பதவிகளுக்கு நியமனம்!

பாதுகாப்பு, நிதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்களை மீண்டும் அதே பதவிகளுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுப் பெற்ற மேஜர் கமல் குணரத்னவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸும், நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்த்தனவும் தொடர்ந்தும் செயற்படவுள்ளனர்.
நேற்று (10) முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
