Local

மூன்று நாட்களுக்குத் தேவையான எரிவாயு பிற்பகல் முதல் சந்தையில் கிடைக்கும்!

2500 மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி நேற்று (07) பிற்பகல் டொலர்களை வழங்கியது. இந்த எரிவாயு இருப்பு மூன்று நாட்களுக்குப் போதுமானது.

இன்று (08) காலை முதல் இந்த எரிவாயு இறக்கும் பணி நடைபெறுவதுடன், பிற்பகலில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை நிரப்பி சந்தைக்கு விட முடியும் என லிட்ரோ கேஸ் நம்பிக்கை தெரிவித் துள்ளது.

டொலர்கள் செலுத்தப்படாத காரணத்தினால் இந்த எரிவாயு கப்பல் இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் சுமார் ஒரு வார காலமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

7200 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய ஏனைய இரண்டு கப்பல்கள் ஆழ்கடலில் நங்கூரமிட் டுள்ளன.

கப்பல்களிலிருந்த  எரிவாயுவை இறக்குவதற்குத் தேவையான டொலர்களை இந்த வாரம் வழங்குவதாக இலங்கை மத்திய வங்கி லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலர்களை செலுத்தாத காரணத்தி னால் எரிவாயு இறக்குமதி கப்பல்களை கடலில் தடுத்து வைத்து நாளொன்றுக்கு 18,000 அமெரிக்க டொலர் தாமத கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading