World

மூன்று வயது சிறுவன் சுட்டதில் தாய் உயிரிழப்பு!

அமெரிக்காவில் மூன்று வயதான சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் தாய் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் சிகாகோ புறநகர் பகுதியான டார்டன் என்ற இடத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றின் அருகே ஒரு குடும்பத்தை சார்ந்தோர் காரை நிறுத்தி வைத்துள்ளனர்.

பின்சீட்டில் மூன்று வயதுடைய சிறுவன் அமர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது. காரின் முன்புறமாக அவனது பெற்றோர்கள் உட்கார்ந்து இருந்தனர்.அந்த காரினுள் சிறுவனது தந்தையின் கைத்துப்பாக்கி இருந்தது. இதை பார்த்து சிறுவன் அதனை பொம்மி துப்பாக்கி என நினைத்து விளையாடி கொண்டிருந்தான்.

அவ்வப்போது எதிர்பாரத விதமாக துப்பாக்கியின் விசையினை தெரியாமல் அழுத்தியதில் துப்பாக்கியிலிருந்து சீறி பாய்ந்த குண்டானது காரின் முன் அமர்ந்து இருந்த தாயின் கழுத்தில் பாய்ந்தது.

துப்பாக்கி குண்டு துளைத்ததில் மயங்கிய அவரை சிகாகோவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பென்னட் இறந்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி வைத்திருக்க அவர் உரிமம் பெற்றுள்ளாரா என்பது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading