Cinema

மூன்று வேடங்களில் நடிகர் விஜய்?

லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். விஜய்யின் 68-வது படமான இதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஒரு விஜய் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் இன்னொரு நாயகியாக சினேகா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்தில் 3 தோற்றங்களில் விஜய் நடிக்க இருப்பதாகவும் அப்பா -மகன் மற்றும் வில்லன் வேடங்களில் அவர் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதைப் படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகர் விஜய் ஆகியோர் கடந்த வாரம் அமெரிக்கா சென்றனர். கலிபோர்னியாவில் உள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில், விஜய்யின் தோற்றத்தை வித்தியாசப்படுத்த 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜியில் அவர் உடலை ஸ்கேன் செய்துள்ளனர். அதன் மூலம் அவர்கள் நினைத்தபடி தோற்றத்தை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading