World

மூளையை உண்பதற்கு முதியவரை கொலை செய்த நபர்!

நபர் ஒருவர்  முதியவர் ஒருவரைக் கொலைசெய்து அவரது மூளையை உட்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இதாஹோ என்ற மாகாணத்தைச் சேர்ந்தவர்  ஜேம்ஸ் டேவிட் ரசல்.மனித மாமிசம் உண்பதில் ஆர்வம் உள்ள இவர் தனது  மூளை சுறுசுறுப்பாக செயல்பட, வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் வசித்து வந்த டேவிட் பிளாகெட் என்ற முதியவரைக் கொலை செய்து அவரின் உடலில்  மூளை உள்ளிட்ட பல பாகங்களை உட்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இது குறித்து கிடைக்கப் பெற்ற  ரகசிய தகவலின் அப்படையில் ஜேம்ஸ் டேவிட் ரசலை அவரது வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரின் வீட்டில் மனித கல்லீரல், நுரையீரல் பாகங்கள், ரத்தம் நிறைந்த கண்ணாடி குவளை, கத்தி, ரத்தக்கறை படிந்த மைக்ரோவேவ் ஓவன் போன்றவை இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜேம்சை மன நல மருத்துவ சோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதாஹோ மாகாணத்தில் நர மாமிசம் உண்போருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். ஒருவேளை இந்த வழக்கில் ஜேம்ஸ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், இதாஹோ மாகாணத்தில் முதன் முதலாக நரமாமிசம் சாப்பிட்டவருக்கான தண்டனையாக இருக்கும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading