Cinema

‘மெட்டி ஒலி’ புகழ் விஜி உமா மகேஸ்வரி திடீர் மரணம்!

மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி இன்று காலமானார்.

சன் டிவியில் கடந்த 2002-ம் ஆண்டு ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்ற சீரியல் மெட்டி ஒலி. அதன் டைட்டில் பாடலான ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது. அந்தளவுக்கு மெட்டி ஒலி சீரியல் மக்களிடையே புகழ் பெற்று இருந்தது.

மெட்டி ஒலி சீரியலை இயக்குனர் திருமுருகன் அவரே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் திருமுருகனுடன் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், உமா மகேஸ்வரி, நீலிமா ராணி, போஸ் வெங்கட் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த சீரியல் முடிந்து பல ஆண்டுகள் கடந்தாலும், மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதில் திருமுருகனின் கதாபாத்திரமான கோபிக்கு ஜோடியாக, விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஸ்வரி. தற்போது 40 வயதாகும் அவர், உடல்நலக்குறைவால் இன்று காலமாகியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading